கண்: “வறட்சியைப் போக்க குளிர்ச்சி” வேண்டும்

2 Min Read

இன்றைய காலத்தில் அலைபேசி பார்ப்பதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இப்படி தொடர்ச்சியாக கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவந்து போதல், எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுவது பலருக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொள்வதால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை அப்போதைக்கு சரியாவது போன்று இருந்தாலும், கண்களின் வறட்சி முழுமையாக நீங்குவதில்லை.எனவே இந்த பிரச்சினைக்கு ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால் தீர்வு காணலாம். அவற்றை பார்ப்போம்:

கணினி மற்றும் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்து விடுவதோடு, அதில் இருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். கண்களில் ஏற்படும் இந்த வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

நீண்ட நேரம் அலைபேசி, கணினி அல்லது மடிக்கணினி முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். அந்த இடைவேளையின் போது கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது, சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது போன்ற கண்களுக்கான சிறுசிறு பயிற்சிகளை செய்யலாம். இதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.

கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ஓய்வு கொள்ளாது செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்கள் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.

கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரி செய்ய ரோசா நீர் (ரோஸ் வாட்டர்) ஒரு சிறந்த பொருள். அந்த நீரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும். குளிர்ச்சியும் இருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *