14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மதுரவாயல் – துறைமுகம் பாலம் அதி வேகத்தில் பணிகள் தொடக்கம்!

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 10- மதுரவாயல் – துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலை யில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டு களாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக் கின்றது. இதற்கான ஒப்பந்தக் கோரல் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப் படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல மைச்சர் கலைஞர் மூலம் 2009இல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கலைஞரின் கனவு திட்டமாக இது இருந்தது. ஆனால் 14 ஆண்டுகளாக இந்த திட்டம் தொடங் கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா அரசியல்: மதுரவாயல் – துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம்.
மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப் பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.
இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப் பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தானது: சென் னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந் துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள் ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infra projects என்ற நிறுவனம் வென்றுள்ளது.
ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகிய வற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் நான்கையும் கைப்பற்றி உள்ளது. இதனால் தற்போது அந்த நிறுவனம் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 9.7கிமீ இரண்டாம் கட்ட சாலைக்கான கட்டு மானத்திற்கான டெண்டர்களை இந்த நிறுவனம் வென் றுள்ளது.
910 நாள் கட்டுமான காலக்கெடு அவர்களுக்கு விதிக்கப் பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான மதிப்பீடு
ரூ. 3608.94 என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒப்புதல்: இங்கே பணிகளை தொடங்க ரயில்வே, சுற்றுசூழல் துறை, கடல் ஒழுங்குமுறை துறை ஆகியவை ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. இதைய டுத்து இதன் பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.

பாலம் நீளம்: இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம் பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.
இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே அதேபோல் தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். வெளிநாடுகள் பலவற் றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டைப் பாலங்கள் பயன் படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும், இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன் படுத்தப்படும். இதனால் போக் குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *