சென்னை,மார்ச் 10-– சென்னை குடிநீர் வாரியத்தில் மாதம் 1,00,000 ரூபாய் ஊதியத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கு ஏப். 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (CMWSSB) காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சட்ட ஆலோசகர் பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி யான நபர்களுக்கு 1,00,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப் பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறலாம்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரி யத்தில் காலியாக உள்ள சட்ட ஆலோசகருக்கான ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரிகளில் சட்டப் பாடப் பிரிவில் இளநிலை தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர் புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனு பவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
அத்துடன் 01.01.2024 அன் றைய தேதியின் படி, 30 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப் பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
சென்னை குடிநீர் வாரியம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப் படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/_- மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு நேர் காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதி காரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவை யான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப் பிடப்பட்டுள்ள முகவரிக்கு 10.04.2024 அன்றுக்குள் அஞ்சல் மூலம் வேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
1 லட்ச ரூபாய் மாத ஊதியத்தில் குடிநீர் வாரியத்தில் வேலை ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
Leave a Comment