கோபி, மார்ச் 10- ஈரோடு மாவட்டம் கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
தற்போது ஒன்றியத்தில் ஆட் சியில் இருக்கும் அரசு பெண் களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனவே ஒன் றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைத்து பெண்களும் ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
இயற்கை பேரிடர்களால் பெரும் பாதிப்புக்குள்ளான போது தமிழ்நாடு வராத பிர தமர் நரேந்திர மோடி, தற்போது அடிக்கடி வருகிறார்.
தமிழர்களின் வாக்குகளை நயவஞ்சகமாக பெற்றுவிட வேண்டும் என்று தனக்கே உரிய பாணியை பயன்படுத்தி திரும்ப திரும்ப வந்துகொண்டு இருக் கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளி கள் இல்லை. அவரை நிச்சயமாக நிராகரிப்பார்கள். வருகிற நாடா ளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட் டணி வெற்றி பெறும்.
நாட்டு மக்கள் நிச்சயமாக மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே ‘இந்தியா’ கூட்டணியை வருகிற நாடாளுமன்ற தேர்த லில் வெற்றி பெற செய்வார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை, அவர்களோடு யார் வருகிறார்களோ? சேர்த்துக் கொண்டு போட்டியிடுவார்கள். ஆனால் அவர்களால் பெரிய விளைவை ஏற்படுத்த முடியாது. அதேபோல் பா.ஜனதாவுடனும் யாரும் விரும்பி கூட்டணி சேர் வதில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய ஆட்சியில் மாற்றம் வருவதற்கு இந்தியா கூட்டணியை பெண்கள் ஆதரிக்க வேண்டும் – சி.பி.அய். இரா.முத்தரசன் பேட்டி
Leave a Comment