சென்னை, மார்ச் 10- அன்னை மணியம் மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொண்டறச் செம்மல் அன்னை மணியம் மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2024) காலை 10 மணியள வில் திராவிடர் கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகச் சென்று வேப் பேரி – பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணி சார்பில் மலர் மாலை அணிவித்து, பெரியார் திடலில அமைந்துள்ள தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சுயமரியா தைச் சுடரொளிகளின் நினைவிடங் களில் மலர் வளையம் வைத்தும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களின் தலைமையில் உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் தொழிலாளர் அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கிய தென்றல், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், திராவிடன் நிதி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக இன்று காலை 8 மணியளவில் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள், உலக மகளிர் நாளை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத் துவமனையில் மகளிருக்கான பொது மருத் துவப் பரிசோதனை முகாம் டாக்டர் மீனாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளா ளர் வீ.குமரேசன் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ச.இன் பக்கனி, வழக்கு ரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, க.இளவழகன் ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசன்,, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் வே.பாண்டு, மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், திரா விடன் நிதி அருள்செல்வன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பொறியாளர் குமார், சைதை தென்றல், கி.இராமலிங்கம், சொ.அன்பு, கோ.தங்கமணி, பா.கோபாலகிருஷ் ணன், ச.இராசேந்திரன், சி.பாசுகர், சி.காமராஜ், வாசகர் வட்டம் ச.ஜனார்த்தனம், மு.இராச மாணிக்கம், தென் மாறன், க.செல்லப்பன், பெரியார் மாணாக்கன், தாம்பரம் சு.மோகன்ராசு, மேடவாக்கம் வெற்றிவீரன், ச.சஅழகிரி, மாடம் பாக்கம் கருப்பையா, கூடுவாஞ்சேரி இராசு, மற்றும் அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவிகள் யுவானி, சங்மின் மற்றும் சி.வெற்றிச் செல்வி, பசும்பொன், தில்சாத், கவிதா, மு.செல்வி, பெரியார் பூவை.செல்வி, மு.பவானி, வளர்மதி, வெண்ணிலா, எஸ்.அமல சுந்தரி, சே.மெ.கவிநிசா, சி.மெர்சி ஆஞ்சலாமேரி, வெ.கா.மகிழினி, சீர்த்தி, மகிழன், நன்னன், தங்க.தனலட்சுமி, இரா.சு.உத்ரா, நாக வள்ளி, நூர்ஜஹான், கலைச் செல்வி, பல்லவி, சரண்யா, எழில்அரசி, எ.பி.தீரா, ச.த.இனியன், ச.க.வெண்பா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மகளிருக்கான மருத்துவ முகாம்
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மக ளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் பெரியார் மருத்துவக்குழுமம் சார்பில் நடை பெற்றது.
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் பணிகளைப்பாராட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மருத்துவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் இயக்க வெளியீடுகளை வழங் கினார். கழக செயலவைத் தலைவர் வழக்கு ரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொருளாளர் வீ.கும ரேசன், துணைப்பொதுச்செயலாளர்கள் பொறி யாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக்கழக அமைப்பாளர் கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பெரியார் மருத்துவக்குழுமம் சார்பில் மருத் துவர் மீனாம்பாள், செவிலியர் கல்லூரி மேனாள் முதல்வர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி உள்பட பலர் உடனிருந் தனர்.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு உயர் சிகிச்சை மய்யத்திலிருந்து மருத்துவர்கள் வெங்கடாசலம், அருள்குமார் மற்றும் நியூலைஃப் மருத்துவ மனை மருத்துவர் சர்மிளா, பெரியார் மணி யம்மை மருத்துவ மனை மருத்துவர் ராஜேஸ் வரி ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினர் மகளி ருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் 60க்கும் மேற்பட்ட மகளிர் பயன் பெற்றனர்.
மருத்துவ முகாமில் நியூ லைஃப் லேப் டெக்னீசியன் கலைச்செல்வி, செவிலியர் சினேகா, விஜயலட்சுமி, ராஜம் மருத்துவ மனை செவிலியர்கள் சகிலா, பேபி, லேப் டெக்னீசியன் சுமதி, செவிலியர் உதவிய லாளர் சீதா, ஆர்ஒய்ஏ காஸ்மோ பவுண் டேஷன் செவிலியர் கஜலட்சுமி, சுபத்ரா தேவி, பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர்ப்புற சுகாதார மய்ய செவிலியர் ஆக்னஸ், உமாலூசி, பெரியார் மணியம்மை மருத்துவ மனை செவிலியர் சந்தியா உள்ளிட்டோர் மருத்துவ முகாமில் சிறப்பாக பணியாற்றினார்கள். பெரியார் மருத்து வக் குழுமம் சார் பில் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
பாராட்டு
பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தோழர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினார்.