திருவாரூர், மார்ச் 9- திருவாரூர் மாவட்ட மேனாள் இளைஞரணி தலைவர், திருவாரூர் ஒன்றிய மேனாள் செய லாளர் பழையவலம் பொன்.தேவ நாதன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 6.3. 2024 அன்று முற்பகல் 11 மணி அளவில் தேவநாதன் இல்லத்தில் நடைபெற்றது.
பழையவலம் ஊராட்சி மன்ற தலைவர் இ.கே.முருகேசன் தலைமை ஏற்று உரையாற்றினார். திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் தேவநாதன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் நினைவேந்தல் உரையாற் றினார்.
நாகை மாவட்டத்தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்த்தா, திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் எஸ் எஸ்.எம்.கே. அருண்காந்தி, தலை மைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ் ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் வீர. கோவிந்தராஜ், பெரியார் பெருந் தொண்டர் கோவிந்தசாமி, திரு வாரூர் ஒன்றிய தலைவர் கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந் திரன், குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேசுவரி, திருவா ரூர் நகரத் தலைவர் சிவானந்தம், மாவட்டத் துணைச் செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப் பினர் முனியாண்டி, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர் இரா. சிவகுமார், மேனாள் ஒன்றிய தலைவர் கனகராஜ், ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தேவநாதனின் மகள் பொறியாளர் தேவ.நர்மதா நன்றி கூறினார்
நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரசு, நாகை ஒன்றிய செயலாளர் கு.சின்னத் துரை, மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் புஸ்பநாதன், மத்திய பல்கலைக்கழக ஊழியர் பொறியாளர் கனகராஜ், மேனாள் அமைச்சர் மதிவாணன் அவர்க ளின் மகன் கதிரவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் பாஸ்கர், திருவாரூர் நகரச் செயலாளர் ஆறு முகம், குடவாசல் ஒன்றிய செய லாளர் க.அசோக்ராஜ், மருத்துவக் கல்லூரி ஊழியர் கார்த்திக், தேவ நாதன் அவர்களின் மகள் தேவன். நந்தினி, மருமகன் இரா.சந்தோஷ், வாழ்விணையர் கவிதா தேவநாதன், சகோதரர்கள் பொன். அருள் நாதன், பொன்.பாரதிதாசன், பொன்.செல்வம், சகோதரி கு.மேரி, மற்றும் கழகத் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.