சென்னை – பெரியார் திடலில் 28.9.2023 அன்று நடந்த பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் ‘இந்தியா-தமிழ்நாடு பொருளாதார நிலைமைகள்’ எனும் தலைப்பில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார். நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பயனாடை அணிவிக்க, திரைப்படத் துறை இனமான இயக்குநர் வி.சி.குகநாதன் நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். உடன் பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் பொறுப்பாளர்கள் தென்.மாறன், ஜெ.ஜனார்த்தனன் உள்ளனர்.