“திராவிட இயக்க முன்னோடி ரிஜிஸ்ட்ரார் பூவராகன் அவர்களின் மூத்த மருமகளும் சிதம்பரம் அண் ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக் டர் நாவலர், இனமான பேராசிரியர் ஆகியோரின் ‘ஆனர்ஸ்’ வகுப்புத் தோழர் நிலவு பூ.கணேசன் அவர் களின் வாழ்விணையருமான திருமதி பழநி அம்மாள் கணேசன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப் பின் சார்பில் நாளை (10.3.2024) காலை 9 மணியளவில், கடலூர் மரியசூசை நகர் இல்லத்தி லும், சென்னை தியாக ராயநகர் தீரர் ஜெ.அன்பழகன் நினைவு நற்பணி மன்றத்தி லும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நிலவு பூ.கணேசன் அவர்களின் குருதி வழி உறவினர்களும், கொள்கை வழி உணர்வாளர்களும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு, அன்னாரது ஒளிப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ஏழை எளி யோருக்கு உணவு வழங்குகின்றனர்” என்று நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் நிலவு பூ.க.செல்வமணி தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு கண்ட நிலவு பூ.கணேசன் வாழ்விணையர் பழநி அம்மாள் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!
Leave a Comment