சென்னை, மார்ச் 9- தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பிற்கான கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஏழு புதிய நடமாடும் மருத்துவ வேன்கள் அளித்து தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.
கோடக் லைஃப் அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ஸ்மைல் அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் மூன்று எம்.எம்.வி.களையும், தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் தலா இரண்டு எம்.எம்.வி.களையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த எம்.எம்.வி.க்கள் சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டுசென்று, சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். முன்முயற்சியின் ஒரு பகுதியாக, வாகனத்தை இயக்கும் செலவுகள், மருத்துவப் பொருள்களை வழங்குதல், எம்.எம்.வி.களின் திறமை யான செயல் பாட்டை உறுதிசெய்யும் பணிகளை கோடக் லைஃப் ஏற்கும்.
இதுகுறித்து கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெடின் நிர்வாக இயக்குநர் மகேஷ் பாலசுப்ரமணியன் கூறுகையில், “தரமான மருத்துவ சேவையை அனைவருக்கும் அணுகக் கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்.
இந்த முயற்சி எங்கள் முக்கிய மதிப்பீடுகளான அக்கறை, சேவையுடன் முழுமையாக ஒத்துப் போகிறது. சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு சுகாதார வசதிகளை எடுத்துச்செல்வதை இத்திட்டம் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.