சென்னை, மார்ச் 9- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து செவிலியர் பணியிடங்களுக்கு தேவைப் பட்டியல் வந்துள்ளது. மேலும், அந்த நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு செல்வதற்கு அந்தந்த நாட்டிற்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பணிக் கான நேர்காணலுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இதனை கருத்தில் கொண்டு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு செல்ல விருப்பமும், ஆர்வமும் உள்ள செவிலியர்கள் மற்றும் செவிலியர் படிப்பு பயிலும் மாணவ – மாணவிகளுக்கு சிறப்பு தேர்வுக்கான பயிற்சியினை வழங்க நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள செவிலியர்கள் மற்றும் செவிலியர் படிப்பு பயிலும் மாணவ – மாணவிகள் தங்களின் சுயவிவர விண்னப் பத்தினை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.
மேலும் இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை www.omcmanpower.tn.gov.in மற்றும்OMCL Mobile App
வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.