“மோடிஜி ஒரு பொய்யின் தொழிற்சாலை”

viduthalai
4 Min Read

பாரதிய ஜனதா என்பது மற்ற கட்சிகளில் இருந்து வீசப்பட்டவர்களின் குப்பைத் தொட்டியாகும்
தேஜஸ்வி கடும் தாக்கு

கடந்த மார்ச் 3, ஞாயிற்றுக்கிழமையன்று பாட்னாவில் நடந்த தனது ஜன் விஸ்வாஸ் பேரணியில் ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி பேசியதாவது:
லாலுவின் ஆட்சி “காட்டாட்சி”” அது குறித்து தேஜஸ்வி ஏன் பேச மறுக்கிறார் என்று சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசியதற்கு,
“மோடி ஜி, தயவு செய்து உங்கள் காதுகளைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் கண் ணாடியைத் துடைத்துக் கொள்ளுங்கள். நான் பேசுவதை தெளிவாகக் கேட்கவும் பார்க்கவும் செய்யுங்கள்.
என் தந்தை கோடிக்கணக்கான ஏழை களையும், விளிம்பு நிலை மக்களையும் அடிமைத்தனத்தின் சங்கிலிப் பிடியில் இருந்து விடுவித்து, அவர்களுக்காகக் குரல் கொடுத்து விடுதலை செய்தார். அவர் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் ரயில்வேக்கு 90,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. பீகாரில் ரயில் பெட்டிகளுக்கான சக்கரங்கள் மற்றும் வேகன் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. அவர் கூலியாட்களின் சேவைகளை முறைப்படுத் தினார் மற்றும் குயவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக ரயில்களில் தேநீருக்கான மண் கோப்பைகளை அறிமுகப்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆட்சியில் ரயில்வே என்ன செய்தது?” என பதிலடி தந்தார் தேஜஸ்வி.
பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் தங்கள் மீது குற்றம் சாட்டப்படும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளால் வேட்டை யாடப்படுவதாக நம்பப்படும் நேரத்தில் தேஜஸ்வி பிரதமரின் மீது இந்த முன்னணி தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

“எனது தந்தை அவர்களுடன் (சங்க பரிவார்) போராடி, அனைத்து சித்திரவதைகளையும், இன்னல்களையும் தாங்கிக் கொண்டார். ராகுல் ஜி மற்றும் அகிலேஷ் ஜிக்கு ஒன்றிய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது. விசாரணை முகமைகளின் சூட்டை எதிர்கொள்ளும் எனது குடும்ப உறுப்பினர்கள் பலரில் நானும் ஒருவன். ஆனால், என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள், நான் சண்டையிடுவேன்… நான் தலைவணங்க மாட்டேன்,” என்று தேஜஸ்வி கூறினார்.
“உங்கள் பாஜகவை சிலர் சலவை இயந்திரம் என்று வர்ணிக்கின்றனர், அங்கு மக்கள் சலவை செய்ய செல்கிறார்கள். ஆனால் பாஜக உண்மை யில் “வாஷிங் மிஷின்” அல்ல, மற்ற அனைத்துக் கட்சிகளும் தூக்கி எறியும் குப்பைகளை தேக்கி வைக்கும் குப்பைத் தொட்டி.- இந்த குப்பைக் கட்சிக்கு எதிரானது, எனது ஆர்ஜேடி கட்சி என்பது ‘உரிமைகள், வேலைகள் மற்றும் வளர்ச்சி’ என்ற வார்த்தைகளின் சுருக்கமாகும்.

வேலைகள்
“இதே காந்தி மைதானத்தில்தான் தயக்கம் காட்டிய முதலமைச்சர் நிதிஷ்குமாரை வைத்துக் கொண்டு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை விநியோகித்தேன். உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா இல் லையா?” தேஜஸ்வி கேட்டார். மக்கள் ‘தேஜஸ்வி ஜிந்தாபாத்’ என்ற எழுச்சியூட்டும் முழக்கங் களுடன் பதிலளித்தனர்.
“கடந்த காலத்தில் பல உத்தரவாதங்களில் தோல்வியுற்ற மோடி ஜி இப்போது ‘மோடி கி உத்தரவாதம்’ பற்றி பேசுகிறார். என்ன உத்தரவாதம் பற்றி பேசுகிறார்?”
“என் மாமா [தேஜஸ்வி நிதிஷை ‘மாமா’ என்று அழைக்கிறார்] அவருடன் தங்குவதற்கு அவர் [மோடி] உத்தரவாதம் அளிப்பாரா?” என்று தேஜஸ்வி கேட்டார்.

“வேலை மற்றும் வேலைவாய்ப்பைப் பற்றி யார் முதலில் பேசினார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது 10 லட்சம் வேலைகள் தருவதாக வாக்குறுதி அளித்தேன். ஆனால், நிதிஷ் என்னிடம், ‘எங்கிருந்து பணம் கிடைக்கும்? என் தந்தை வீட்டில் இருந்து கொண்டு வரவா? இது சாத்தியமற்றது” என்று கூறினார்.
ஆனால் ஆகஸ்ட் 2022 இல் மகாகத்பந்தனில் இணைந்த ஒரு வாரத்திற்குள். , அதே காந்தி மைதானத்தில் ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையில் தேஜஸ்வியின் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார் நிதிஷ். கூட்டணி அரசு பதவியேற்ற 17 மாதங்களில் சுமார் 4.5 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

2020 இல் அவர் செய்த அதே முறையில், 2024 தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்னதாக, வேலைவாய்ப்பை தனது கட்சியின் பிரச்சாரத்தின் மய்யப் பிரச்சினையாக மாற்றுவதில் தேஜஸ்வி தெளிவாக ஆர்வமாக உள்ளார்.
தேஜஸ்வியின் ‘மகாத்பந்தன் கா ஜன் விஸ்வாஸ் பேரணி’ – மக்கள் நம்பிக்கைக்கான மகா கூட்டணியின் பேரணி – மகத்தான வரவேற்பைக் கண்டது. ஆங்காங்கே மழைத் தூறல் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் நகரத்தின் தெருக்களில் மக்கள் ஒருவருக்கொருவர் சலசலக்கும் வகையில் காந்தி மைதானம் மனிதக் கடலாக இருந்தது.
பேரணியில் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சித் தலைவர்கள், தீபங்கர் பட்டாச்சார்யா, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொகுப்பு:
குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *