இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 9- சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி களில் 2009 மே 31ஆ-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசி ரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1இ-ல் பணி நியமன மான ஆசிரியர்களுக்கு வேறொரு ஊதியமும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் தரக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத் தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு நடந்த தொடர் போராட்டத் தின்போது நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் இந்த கோரிக்கை தொடர்பாக குழுமைத்து 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதேநேரம் குழு அமைத்து 5 மாதங்களான பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத தால் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் பிப்.19 முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள், சென்னை டிபிஅய் வளாகத்தில் நேற்று (8.3.2024) பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை திரும்பப் பெறு வதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. தேர்தல் முடிந்ததும் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதேபோல், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறை வேற்றித் தர இருப்பதாகவும், அதில் எங்களின் கோரிக்கையும் இருக்கும் எனக் கூறினர். அதை யேற்று போராட்டத்தை தற்காலிக மாக திரும்பப் பெறுகிறோம்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *