தகுதிகள் என்ன?
* மோடியைப்பற்றிப் பேச கனிமொழிக்குத் தகுதி யில்லை
– அண்ணாமலை, பி.ஜே.பி.
>> மோடியைப்பற்றிப் பேச என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று அண்ணாமலை பட்டியலிட்டால் நல்லது!
பி.ஜே.பி. என்றால்….
* காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்குகளை சேகரிக்கும் கருவியாகவே பார்த்தது. – ஜே.பி.நட்டா, பி.ஜே.பி.
>> இந்திய குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், பூரி ஜெகந்நாதர் கோவிலிலும், அஜ்மீர் பிரம்மா கோவிலிலும் நுழைய விடாமல் தடுக்கப் பட்டாரே, அப்பொழுது பி.ஜே.பி. ஆட்சி என்ன செய்தது? இப்பொழுதுகூட இந்திய குடியரசுத் தலை வராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த மகளிர் இருக் கிறாரே, அவருக்குக் குறைந்தபட்சம் நாடாளு மன்ற கட்டட திறப்பு விழாவிற்கு அழைப்பையாவது கொடுத் ததுண்டா? பி.ஜே.பி. என்றால், சிறுபான்மை யினருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான ஹிந்துத்துவக் கட்சி என்பது எல்லோருக்கும்தான் தெரியுமே!.
அதிலும்கூட கார்ப்பரேட்தானா?
* உலக மகளிர் நாளையொட்டி சுதாமூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக பிரதமர் மோடி அறிவிப்பு.
>> அதிலும்கூட கார்ப்பரேட் கம்பெனி பெண் மணிதானா?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment