(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
தேவநாதன், பத்ரிநாத், சாமியார் ஆசாராம் யார்? யார்?
“துக்ளக்” பதில் சொல்லுமா?
கவிஞர் கலி.பூங்குன்றன்
4.10.2023 நாளிட்ட ‘துக்ளக்’கில் வெளி வந்துள்ள கேள்வி – பதில்களுக்கு இங்கு பதிலடிகள் தரப்படுகின்றன.
கேள்வி: நீங்கள் இந்தியனா, பாரதியனா?
பதில்: பாஸ்போர்ட்டில் இந்தியன், மனதில் பாரதியன்.
நமது பதிலடி: அப்பா யார் என்று கேட்டால் இப்படிதான் பதில் சொல்லுவார்களோ!
– – – – –
கேள்வி: குலம் கோத்திரம் பார்க்கப்படுவதன் நோக்கம் என்ன?
பதில்: குலம், கோத்திரம் என்பது ஒருவரின் கலாசார விலாசம். கலாசார முறையில் உறவு தேடுபவர்களுக்கு அவசியமானது அது.
நமது பதிலடி: அது என்ன கலாசாரம்? பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். கும்பகோணத்தில் பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு என்றே ஒன்று இருக்கிறதே!
இதுபற்றி குருமூர்த்தியின் மகா பெரியவாள் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே! (காஞ்சி காமக்கோடி சங்கராச் சாரியார் உபந்நியாசங்கள் முற்பகுதி).
குருமூர்த்தி அய்யர் உட்பட குடுமி வைத்துக் கொள்வதில்லை. பஞ்சகச்சம் வைத்து வேட்டிக் கட்டுவதில்லை. சர்.சி.பி.ராமசாமி அய்யர் மாட்டு நாக்கைத்தான் ருசித்து சாப்பிடுவாராம்.
கணவனை இழந்த பாப்பாத்தி அம்மாள் மொட்டை பாப்பாத்தி என்று அழைக்கப்படுவதுண்டா?
“வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள்” என்று மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறினாரே – பார்ப்பனப் பெண்களும் அந்தப் பட்டியலில் வரமாட்டார்களா?
பெண்களில் 30 சதவீதத்தினர் தான் பெண்மை உள்ளவர்கள் என்று இதே குருமூர்த்தி சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?
இவற்றில் எதுவெல்லாம் குலம், கோத்திரம் என்று சீர்புரிந்து வாய்ப்பாடு கூறுமா ‘துக்ளக்’?
“கிரேதாயுகக் காலங்களில் ராக்ஷதர்கள் எல்லாம் கலியுகக் காலத்திலும் பாப்பார ஜாதியில் பிறப்பார்கள், கெட்ட அசிங்கங்களைச் செய்வார்கள்! என்று தேவி பாகவதத்தில் பரமேஸ்வரராலும், மகாபாரத்தில் பீஷ் மாச்சாரியாராலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாக்கி யங்களை இக்காலத்துப் பார்ப்பனர்கள் நிர்ணயப்படுத்து கிறார்கள் போலும்! மேற்படி நூல்களைப் பற்றி யானெ ழுதுவது மிகையே! ஏனெனில் ‘குடிஅரசில்’ நமது கைவல்யம் கை வலியாது கணக்கற்றவை வரைந்து கொண்டே வருகிறார்” – ஒரு நிருபர் (‘குடிஅரசு’, 13.1.1929).
இங்கே எல்லாம் கோத்திரம் எங்கே போயிற்று?
சதாசிவம் – எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்யாணம் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தது? ராஜகோபாலாச்சாரி யாரும் – காந்தியாரும் சம்பந்தியானது எந்த வகைக் கோத்திரம்?
அமெரிக்கா சென்று ‘பிராமணிசத்தை’ பரப்புரை செய்து வந்த விவேகானந்தர் மனோன்மணியம் சுந் தரனாரின் விருந்தினராகத் தங்கியிருந்தபோது ‘நீங்கள் எந்தக் கோத்திரம்’? என்று விவேகானந்தர் கேட்க ‘திராவிடக் கோத்திரம்’ என்று முகத்திலடித்தாற்போல சுந்தரனார் பதிலடி கொடுத்தாரே – இதற்கு என்ன பதில் குருமூர்த்தியாரே?
– – – – –
கேள்வி: பெண்களிடம் நீங்கள் வியந்தது என்ன?
துக்ளக் பதில்: குடும்பம் குழந்தைகள்தான் வாழ்க்கை என்று நினைப்பதிலிருந்து திருமணம் இல்லாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்வது வரை, உடல் முழுவதும் மறைத்து உடை உடுப்பதிலிருந்து, உடல் முழுவதும் தெரியும்படி உடை உடுப்பது வரை – பெண்கள்தான் எத்தனை விதமாக இருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன்.
நமது பதிலடி: பெண்கள் எப்படி உடை உடுத்து கிறார்கள், உடல் பாகங்கள் தெரிகிறதா என்பது வரை உற்றுப் பார்ப்பதுதான் குருமூர்த்தி வேலையா?
சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் தானே இவாளின் கிருஷ்ண பகவான்.
ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு, குளத்தில் குளிக்கப் போன பெண்களின் உடைகளைத் திருடி, மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டு பெண்களை இரசித்த காமுகனைக் கடவுள் என்று கொண்டாடி அத்தகைய படங்களை அசூயை இன்றி வீட்டில் மாட்டி வைத்து பூமாலை சாத்தி நமஸ்காரம் செய்யும் கும்பல் பெண்களின் தனிப்பட்ட உடைகளைப் பற்றி ஆராய்ச்சியில் மூழ்குவது வெட்கக்கேடு அல்லவா!
சாமியார் ஆசாராம் ஆசிரமத்தின் யோக்கியதை என்ன?
“எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நான் செய்தேன்” என்று நீதிமன்றத்திலேயே சொல்ல வில்லையா? மன உளைச்சல் ஏற்படும்போது எல்லாம் சாமியார் ஆசிரமத்துக்குச் செல்லுவதாக மோடிஜி சொல்லவில்லையா?
காஞ்சிபுரத்தில் கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களைக் கரு உறச் செய்பவன் தா«ன் இவர் களுக்குத் தேவநாதன்.
மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவர்தானே இவாளுக்கு ஜெகத்குரு. வெட்கக் கேடு. அவருக்கான விழாவில்தானே ஆளுநர் கலந்து கொண்டு ஆன்மிகம் பேசுகிறார்.
– – – – –
கேள்வி: ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிறது தத்துவம். உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஏற்பட்ட ‘ஏன்’ தாக்கம் பற்றி?
துக்ளக் பதில்: ஏன் என்ற கேள்வி தொடர்கதை. அதனால் வாழ்க்கைத் திருப்பமும் தொடர் கதை. ஏன் என்ற கேள்வி நின்றால்தான் அதனால் ஏற்படும் வாழ்க்கைத் திருப்பங்களும் நிற்கும். மனிதன் சிந்திக்கும் வரையில் அந்தக் கேள்வி தொடர்கதை. வாழ்க்கைத் திருப்பங்களும் தொடர்கிறது.
நமது பதிலடி: ஏன், எதற்கு, எப்படி, என்று கேள்வி கேள் என்று தந்தை பெரியார் சொன்னபோது கசந்தது; இப்பொழுது அது இனிக்கிறதோ – எங்கு முட்டியும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்பில் வந்துதான் சேர வேண்டும்.
– – – – –
கேள்வி: அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட்டுகள், வேலையின்மை, விலைவாசி உயர்வு என்ற பிரச்சினைகளையே சொல்கிறார்களே, வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லையா?
துக்ளக் பதில்: அதனால்தான் 60 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் காங்கிரஸுக்கு அடுத்த கட்சியாக இருந்த அவர்கள் இன்று சரிந்து திமுகவிடம் பணமும் கேட்கும் கட்சியாக விட்டார்கள்.
நமது பதிலடி: நீங்களும்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடவுள், மதம், பக்தி, யோகம், சம்பாராதனை, ஸநாதனம் என்று பேசி வருகிறீர்கள்.
கடைசியில் என்ன? உங்களின் குருநாதர் ‘சோ’ ராமசாமி சொன்னாரே – கோயிலுக்கு எதுக்குப் போறான் ‘சைட்’ அடிக்கத்தானே போகிறான்.
(‘துக்ளக்’, 1.6.1981, பக். 32)
கம்யூனிஸ்ட்டுகள் வேலை வாயப்பு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவது, போராடுவது மக்கள் நலனைச் சார்ந்தது. குருமூர்த்தி கூட்டம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் கூவுவது பக்தியின் பெயரால் ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதும், சுரண்டல் கொள்ளை நடத்துவதும்தானே!
– – – – –
கேள்வி: தமிழகத்தில் முதன்முதலாக மூன்று பெண் அர்ச்சகர்கள் தேர்வானதை, “கருவைச் சுமக்கும் பெண்கள் கருவறைக்குள்” என்று முதல்வர் புகழ்ந் திருக்கிறாரே?
துக்ளக் பதில்: கருவைச் சுமக்கும் பெண் அர்ச்சகர்கள் கருவறையில் இருக்கும் கோயிலில் ஸ்டாலின் குடும்பத்தினர் நேர்த்திக்கடன் செய்தபிறகு, ஸ்டாலின் பேசியது உண்மையா அல்லது எதுகை மோனைக்காகவா என்பது தெரிந்து விடும்.
நமது பதிலடி: கேள்விக்கும் – பதிலுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா? இந்தப் பாணிக்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.
கோயிலுக்குப் பெண்கள் செல்லுவதற்குத் தடையில்லை. ஆனால் கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்லத் தடை இருக்கிறது இவாளின் ஸநாதனத்தில். அதை உடைத்துப் பெண்கள் கருவறைக்குள் செல்ல வைத்தது என்பது ஸநாதனத்துக்கு விழுந்த சவுக்கடி தானே!
கோயிலுக்குள் ஆண் சாமி, பெண் சாமி இருக்கிறதே – அது எப்படியாம்?
தேவநாதன் (காஞ்சிபுரம்), சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரிநாத் கதைகளுக்கு என்ன பதில்?
குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சுவாமி நாராய ணன் கோயில் – அக்கோயிலுக்குள்ளேயே இருந்த குடிலிலேயே அர்ச்சகப் பார்ப்பனர் சந்த் தேவ்வல்லம், பக்தைகளிடம் ஆடிய சல்லாபம் சாதாரணமா?
‘சந்தோஷ்’ பத்திரிகை படத்துடன் வெளியிட்டதே!
– – – – –
கேள்வி: இறைவனை நாம் அடைய வேண்டுமா? இறைவன் நம்மை அடைய வேண்டுமா?
பதில்: எங்கும் வியாபித்த பிரும்மம் (எனும் இறைவன்) நம்முள் இருக்கிறான் என்ற நிலையை நாம் அடையும்போது, இறைவன் நம்முள் உறைகிறான். இறைவனுள் நாம் உறைகிறோம். இதை இரண்டறக் கலந்த நிலை என்கிறார்கள் – ஆன்மிகப் பெரியோர்கள்.
நமது பதிலடி: நேரடியாகப் பதில் சொல்ல முடியாவிட்டால் யாரோ ஆன்மிகப் பெரியோர்கள் என்று தப்பித்துக் கொள்வது அறிவு நாணயமா?
எங்கும் வியாபித்த இறைவனுக்குக் கோயில் கட்டுவானேன் – அர்ச்சகர் ஏன்? ஆறுகால பூஜை ஏன்? கடவுளுக்கு மனைவி, வைப்பாட்டி ஏன்? குழந்தைகள், குட்டிகள் ஏன்? கடவுள்களுக்குள் சண்டைச் சச்சரவுகள் ஏன்? கொலைகள் ஏன்?
இப்படி இறைவனைப் பற்றிக் கூறும் கூட்டத் திற்கிடையே மதமாச்சாரியங்கள் ஏன்? ஒரே மதத்தில் அடி தடிகள் ஏ ன்? நாமச் சண்டைகள் ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
ஊரை ஏமாற்றுவதற்கும், சுரண்டலுக்குமான ஏற்பாடுகள்தான் இவை என்று நாணயமாக ஒத்துக் கொள்ளட்டும்!