காலப்போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டு ஆக வேண்டும்; இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விட வேண்டும். அங்கும் கூடக் காலம் அவனைத் தொடர்ந்து கொண்டுதான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவது போல் காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.
(6.12.1944, “குடிஅரசு” பக்கம் 2)