உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும்

2 Min Read

சென்னை, மார்ச் 8- உலகத்தமிழ் தொழில் அதிபர்கள், திறனாளர் கள் மாநாடு வருகிற ஜூன் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் நடக்கிறது.
மாநாடு
“திரைஸ்-எழுமின்” அமைப்பின் நிறுவனர் ம.ஜெகத்கஸ்பர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரி கையாளர்களிடம் கூறியதாவது:-
திரைஸ்-எழுமின் அமைப்பு சார்பில் சார்பில் 13ஆவது உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வருகிற ஜூன் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவேஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான உலகத் தமிழ் தொழில் அதிபர்கள், திறனாளர் கள் என வெற்றித் தமிழர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த மாநாட்டினை சுவிட்சர் லாந்து நாட்டு அதிபர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் சுவிட்சர்லாந்து நாட்டின் தொழில் வணிக அமைப்பு களும், முதலீட்டு நிறுவனங்களும், அய்ரோப்பிய ஒன்றியத்தின் அலு வலகங்களும், உலக வங்கியின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

பதிவு செய்யலாம்
தமிழர்கள் உள்ளூரில் செய் யும் தகுதிகொண்ட தொழில்களை உலகமயப்படுத்துவது. ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் தமிழர் களிடையே வலைப் பின்னல்களை ஏற்படுத்துவது, தொழில்-வணிக வளர்ச்சிக்கு அடிப்படை மூல தனத்தை திரட்ட வழிகாட்டுவது. தொழில்நுட்ப அறிவு, அனுபவங் களை பகிர்வது இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் www.tamilrise.org என்ற இணையதளம் வாயிலா கவோ, 9150060032, 9150060035 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம்.
இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30 சதவீதம் பதிவு கட்டண சலுகை தரப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, அனைத்துலக தமிழ் பொறியா ளர் பேரவைத் தலைவர் கிருஷ்ணா ஜெகன், பொறியா ளர் பேரவையின் தமிழகத் தலைவர் செல்வம் சந்திர காசு, தி ரைஸ் ஓமான் நாட்டு தலைவர் ஜோஸ் மைக்கில் ராபின், அனைத்துலக தமிழ் வழக்குரைஞர் பேரவையின் தமிழகத் தலைவர் கனிமொழி மதி, தமைமையக இயக்குநர் சுரேஷ் மனோ கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *