சென்னை, மார்ச்.8- கடந்த 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தத்தில் 5 லட்சம் பேரை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண் டும் என்ற இலக்கை நோக்கி பள்ளிக்கல்வித்துறை தீவிர மாக செயல்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில்…
அரசுப் பள்ளிகளில் மாண வர் சேர்க்கைப் பணிகள் வழக் கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப் பட்டு விட்டது. தனியார் பள் ளிகளுக்கு நிகரான வசதி களுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறையும் பல்வேறு திட் டங்கள், வசதிகளை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய் வகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், தொடக்கப் பள் ளிகளில் “ஸ்மார்ட் கிளாஸ் ரூம்” கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதவிர 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப் லெட்) வழங்கப்பட உள்ளது.
மாணவர் சேர்க்கை
இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை பள் ளிக்கல்வித்துறை முன்னெ டுத்து சென்று கொண்டிருக் கிறது. இதற்காக ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக் கப்பட்டுள்ளது. அந்தவகை யில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதில் அதிக பட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 365 மாணவர் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 லட்சம் இலக்கு
இதுமட்டுமல்லாமல், அங்கன்வாடி மய்யங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள் ளவும், 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசி ரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு இருக்கிறது.