பொதுத்துறையை சேர்ந்த ரூர்கேலா இரும்பு ஆலையில்
காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஆப்பரேட்டர் டெக்னீசியன் பிரிவில் பாய்லர் ஆப்பரேட்டர் 20, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 10, அட்டென்டன்ட் டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரீசியன் 25, பிட்டர் 28, எலக்ட்ரானிக்ஸ் 10, மெஷினிஸ்ட் 10, டீசல் மெக்கானிக் 4, அய்.டி., 3 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஆப்பரேட்டர் டெக்னீசியன் பணிக்கு டிப்ளமோ, அட்டென்டன்ட் டெக்னீசியன் பணிக்கு அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 16.12.2023 அடிப்படையில் பாய்லர் ஆப்பரேட்டர் 18 – 30, மற்ற பதவிக்கு 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, திறன் (ஷிளீவீறீறீ) தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ஆப்பரேட்டர் ரூ. 500 (எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 150) அட்டென்டன்ட் ரூ. 300 (எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 100)
கடைசி நாள்: 16.12.2023
விவரங்களுக்கு: sailcareers.com