விண்வெளி வீரர்கள்!
நிலவின் மேற்பரப்பில் நடக்கும் அறிவியல் அதிசியத்தை கண்காணித்து அதை கண்டுபிடித்து ஆராய்ந்து உலகை திரும்பி பார்க்க செய்யும் விண்வெளி வீரராக மாறுவதன் சவால்களை காணலாம்
விண்வெளி வீரராக இருப்பதற்கும் சவால்கள் நிறைந்த நன்மைகள் பலவும் உள்ளன.
புதிய உலகை பார்ப்பது!
விண்வெளி வீரர்கள் கடுமையான முயற்சிக்கு பின் தேர்ச்சி பெறுகின்றனர். பின், சவால்கள் நிறைந்த விண்வெளியில் இருந்து பூமியையும் மற்ற கோள்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
புதிய அனுபவம்!
விண்வெளி வீரர்கள் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அறிவுள்ள நபர்கள். அவர்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் பல வருடங்கள் செலவழிகின்றனர். விண்வெளி சென்று ஒரு எல்லையற்ற இடத்தை அடைவதன் மூலம் பெருமிதம் கொள்கிறார்கள்.
உயர்நிலை
உயர்நிலை புதுமையான கண்டுபிடிப்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அதேபோல், சிறந்த மனதோடும் பெரிய விஞ்ஞானிகள் மத்தியில் பணிபுரிந்த்து பல புதிய விடயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.
விண்வெளி வீரர் எதிர்கொள்ளும் சவால்கள்
சவால்கள் நிறைந்த விண்வெளித்துறை உயிரை பணயம் வைப்பது!
போட்டி நிறைந்த இந்த துறையில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் பெரும் சவாலாக இருக்கும். விண்வெளியில் வீரர்கள் பலத்த காயமடையாளம் அல்லது அங்கு தொலைந்தும் கூட போகலாம்.
தனிமை
வீரர்கள் ஆராய்ச்சி செய்வதில் ஏதேனும் சிறு கோளாறு வந்தாலும் அதற்காக மிகவும் அழுத்த்திற்கு ஆளாவார்கள். இதனால், தனிமையாக இருப்பது போன்ற உணர்வைப் பெறலாம். மேலும், இறுதியில் மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.
பிரிவு!
விண்வெளி வீரராக மாறுவதற்கு தோராயமாக பத்து வருடங்கள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம் என கூறப்படுகிறது. ஆகையால் நண்பர்கள், பெற்றோர்கள், பிடித்த உறவுகள் அனைவரையும் விலகி இருக்கக்கூடும். இதனால், மனதளவில் உற்சாகம் குறைந்துபோகலாம்.