நெல்லை, மார்ச் 7 – ‘அய்யா வைகுண்டரை ஸனாதனவாதி என்று கூறிய தமிழ்நாடு ஆளு நரை மக்கள் ஏற்கமாட் டார்கள்’ என்று சபாநாய கர் மு.அப்பாவு கூறினார்.
நெல்லை மாவட்டம் விஜயாபதியில் பேரவைத் தலைவர் அப்பாவு 5.3.2024 அன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:- 1833ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர் பிறந்தார். அந்த காலகட்டத்தில் அவர் பிறந்த சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்லமுடி யாது. கோவிலுக்குள் நுழைய முடியாது பெண்கள் மார்பில் துணி அணியக்கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக்கூடாது என்ற நெருக்கடியான காலம் ஆகும். அவருக்கு பெற் றோர் இட்ட பெயர் முடி சூடும் பெருமாள்.
அப்போது ஸனாதன தர்மம் உச்சத் தில் இருந் தது. திருவாங்கூர் மக ராஜா ஒரு சனாதனவாதி. அவர் அய்யா வைகுண்டர் இழிகுலத்தில் பிறந்தார் என கூறி முத்துக்குட்டி என அவரது பெயரை மாற்றினார். இந்த கொடுமைகளை செய்தது ஸநாதன ஆதிக்க சக்திகள். இதற்கு எதிராக அய்யா வைகுண்டர் கடவுள் அவ தாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழி முறையை கொண்டு வந் தார். அதுதான் சமத்துவம், சமதர்மம், ஜாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோள் ஆகும். அவருக்கு ஸனா தனவாதிகளால் தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்து போராடி சம தர்மத்தை நிலை நாட்டி யவர். இப்படிப்பட்ட அய்யா வைகுண்டர் ஸனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். உலகில் தோன் றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தவர் கால்டு வெல். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோ ருக்குமான ஆட்சி நடத்துகிறார். 90 சதவீத இந்துக்களுக்கு எதிரான வர்கள்தான் ஒன்றிய ஆட்சியில் இருப் பவர்கள். உதாரணமாக ஒன்றிய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு உயர் வகுப்பின ருக்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 90 சதவீத இந் துக்களுக்கு கொடுக்கப்பட வில்லை. இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். 10 சதவீத மக்களுக்கான ஆட்சி, ஸனாதனத் திற்கான ஆட்சி. இதில் இருந்து வந்தவர்தான் தமிழ்நாடு ஆளுநர். அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
-இவ்வாறு அவர் கூறினார்.