அன்புள்ள பெரியார் தாத்தா,
உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது. எப்படித் தாத்தா அந்தக் காலத்திலேயே அவ்வளவு தெளிவாகப் பெண் களைப் பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்தித் தீர்கள்? சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதுதான் உண்மையான சந்தோஷம், ரொம்ப வயதான பிறகும்கூட மக்களுக்குச் சேவை செய்வது தான் முக்கியம் என்றெல்லாம் சொன்ன உங்களின் எண்ணங்களைக் கண்டு வியக்கிறேன் தாத்தா. தாடி உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்கிறது. உங்களைப் பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் தாத்தா.
என்றும் உங்கள் பிரியமான பேத்தி,
– ஆ. ஜாஸ்லீன் ஆக்னஸ்,
6-ஆம் வகுப்பு, – தூய வளனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆரணி, திருவண்ணாமலை.
– நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 6.3.2024