6.3.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ மக்களின் பிரச்சினையை திசை திருப்ப, கடவுள் பேரை சொல்லச் சொல்லி மக்களை சாவுக் குழிக்கு அனுப்புகிறார் மோடி, இந்தியா நியாய நடைப்பயணத்தில் மக்களுக்கு ராகுல் எச்சரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளான ரா, உளவுத்துறை, மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் பிற துறைகள் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளன, போதைப் பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மோடி தவறிவிட்டார் “நார்கோடிக்ஸ் கட்டுப்பாட்டு பணியகம் போன்ற ஒன்றிய அரசின் ஏஜென்சிகளுக்கு தெரியாமல், மாநிலங் களுக்கு இடையே கடத்தல் பொருட்களை நகர்த்த முடியாது,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு.
தி ஹிந்து:
♦80% மக்கள் வறுமையில் தவிக்கின்றனர், 100 கோடி பேர் வேலையின்றி உள்ளனர், 120 கோடி பேர் பணவீக் கத்தால் ஆதரவற்ற நிலையில் உள்ளனர், அனைத்து குடும் பங்களும் மகிழ்ச்சியடையவில்லை, ஆனாலும் அவர் (மோடி) அவர்களை தனது குடும்பம் என்று அழைக்கிறார்” தேஜஸ்வி கிண்டல்.
♦ காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் முக்கிய கவனம் வாழ்வாதாரப் பிரச்சினைகளாக இருக்கும். பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண கட்சி திட்டமிட்டுள்ளது
தி டெலிகிராப்:
♦ காஷ்மீரில் மார்ச் 7ஆம் தேதி 2 லட்சம் பேர் திரளுவார்கள் என பாஜக உறுதியளித்துள்ள நிலையில், பிரதமர் மோடி பேரணியில் கலந்து கொள்ளுமாறு அரசு ஊழியர்களுக்கு காஷ்மீர் அரசு நிர்ப்பந்தம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் ராஜினாமா: பாஜவில் இணைவதாக அறிவிப்பு. அவரது முந்தைய தீர்ப்புகள் அனைத்தும் திரினாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக இருந்ததைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் அரசு புகார் மனு அளிக்க முடிவு.
– குடந்தை கருணா