திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், இணையர் பே.உமாமகேசுவரி, மகள் ஒ.உ. மிளிரா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரை நேற்று (5.3.2024) சந்தித்தனர். தே.ஒளிவண்ணன் தனது பணியின் காரணமாக லண்டன் (7.3.2024)செல்ல உள்ளதை தெரிவித்து வாழ்த்துகள் பெற்றார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 5000 நன்கொடையை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.