சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் வழக்குரைஞர்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிட ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 6- தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் வழக் குரைஞர்கள் தங்கள் உண்ணா நிலை அறப்போராட்டத்தை கை விடக் கோரி, தமிழ்நாடு முதல மைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத் துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன் றான “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற நிலைப்பாட்டின் அடிப் படையில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முதல மைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையிலேயே தமிழ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தமிழ்நாடு முதலமைச்சர் தன்னு டைய உரையிலேயே ‘தமிழை வழக்காடு மொழியாக நடை முறைப்படுத்த வேண்டும’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

2009, 2014, 2019 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், இக்கோரிக்கை வலியுறுத்தப்பட் டுள்ளது. குறிப்பாக கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக் கையில் 16வது பக்கத்தில் “4 உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக தமிழ்” என்ற தலைப்பில் “ஹிந்தி அல்லது மாநில மொழிகள் உயர்நீதி மன்றங் களின் தீர்ப்புகளிலும் ஆணைகளி லும் பயன்படுத்தப்படலாம்” என அலுவலக மொழிகள் சட்டம், 1963 பிரிவு 7இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மாநில சட்டப் பேரவை தீர்மானம் இயற்றி, அது குடியரசுத் தலைவ ருக்கு அனுப்பி வைக்கப்பட்டால். குடியரசுத் தலைவர் அந்த தீர்மா னத்தை ஏற்று உரிய ஆணை பிறப் பிக்க வேண்டும் எனவும் மத்திய அலுவலக மொழிச் சட்டம் தெளி வாகக் கூறியுள்ளது.

இதற்கேற்ப, மறைந்த முதல மைச்சர் கலைஞர், முதலமைச்சராக இருந்த நேரத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை 6-12-2006 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறை வேற்றியது. தொடர்ந்து, ஆளுந ரின் பரிந்துரையுடன் இத்தீர் மானம் 11-2-2007 அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், இதுகாறும், ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தமிழை நீதி மன்ற மொழியாக ஆக்கிடும் தீர்மா னத்தை, ஒன்றிய அரசு உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.” என வாக்குறுதி அளித்திருப்பதோடு, தொடர்ந்து தற்போதைய தமிழ் நாடு முதலமைச்சரும் அதையே வலி யுறுத்தி வருகிறார்.
எனவே, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென உண்ணாநிலை மேற்கொண்டிருக் கும் வழக்குரைஞர்கள் தங்கள் உண் ணாநிலை அறப்போராட்டத்தை கைவிடக் கோரி, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத் துக்கு அருகில், தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறை வேற்ற வேண் டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் 25 பேர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற் கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *