கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் (AAICLAS) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் பிரிவில் 906 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி., 55%) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.11.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
பணியிடம்: சென்னை, மதுரை, திருச்சி, திருப்பதி, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, கொல்கத்தா, வாரணாசி உட்பட 23 இடங்கள்.
தேர்ச்சி முறை: கல்வித் தகுதி மதிப்பெண்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசி நாள்: 8.12.2023
விவரங்களுக்கு: aaiclas.aero