சென்னை,மார்ச் 6- கடந்த 14.4.2015 அன்று திராவிடர் கழக சார்பில் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற தாலி அகற்றும் விழா நடந்து முடிந்த நிலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகத்தினர் மீதான வழக்கை நேற்று (5.3.2024) ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி உண்ணும் விழாவுக்கு முந்தைய அதிமுக அரசு அனுமதி மறுத்த நிலையில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் காவல்துறை அனுமதி மறுப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் – அரசியல் சட்டப்பிரிவு 19(1) இன் படி அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் நடைபெற்ற நிகழ்வில் திட்டமிட்டு கலவரம் செய்த இந்து முன்னணியினருக்கு எதிர்ப்பு தெரிவித்த, திராவிடர் கழகத்தினர் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய் தனர் பின்பு 2017 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
மேற்படி வழக்கு நேற்று (5.3.2024) சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.ஆனந்த வெங்கடேசு அவர்கள் முன்பு வந்தது. கழக வழக்குரைஞர் துரை அருண், ஜி.மோகன், கே.எஸ்.சிவா ஆருத்ரா, ஜான் ஞானசீலன், என்.மோகன் குமார் ஆகியோர் நேரில் வாதிட்டனர்.
நீதிமன்ற அனுமதியுடன் தாலி அகற்றும் நடைபெற்றது. அதன் பிறகு காவல்துறை மேல்முறையீட்டில் மேற்படி நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு கழக தொண் டர்களை கலைந்து போகச்சொன்னார் ஆசிரியர் கி.வீரமணி. அதன்படி அனைவரும் கலைந்து சென்ற நிலையில், இந்து முன்னணி மற்றும் சிவசேனாவினர் மாலை 3 மணிக்கு பெரியார் திடலுக்கு வந்து வன்முறை யில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதற்காக போடப்பட்ட வழக்கு என்ற அடிப் படையில் மேற்படி வழக்கை ரத்து செய்து உத்தர விட்டார் நீதியரசர் என்.ஆனந்த வெங்கடேசு.
இவ்வழக்கு ஆரம்பக்கால முதல் முழுமையாக வழக்குரைஞர் சு.குமார தேவன் மேற்பார்வையில் நடை பெற்றது.