திராவிடத்தின் விடிவெள்ளி திராவிட மாடல் ஆட்சி திராவிடம் வெல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளை (1.3.2024) முன்னிட்டு முற்றுப் புள்ளி இல்லா நல்லாட்சி நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் தனது 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாகவும் ரூ.500 நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு வை.நடராசன் நன்கொடை அளித்தார்.
– – – – –
புதுக்கோட்டை ஏனாதி கிராமம் பழனியின்
18ஆம் ஆண்டு நினைவு கூர்ந்தும் மற்றும் பெரியார் பிஞ்சு மு.கா.இளஞ்செழியனின் 9ஆவது பிறந்த நாள் (4.3.2022) மகிழ்வாகவும் பழ. நல்லம்மாள், பழ.நல்.முத்துக்குமார்,
மு. கார்த்திகா, பழ.நல். நாகராசு, நா.செண்பகம், பழ.நல். வெற்றிவேல், நா.செ.அன்பு செழியன், மு.கா. இளம்கவி, நா.செ. கயல் கவி ஆகியோர் சார்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,500 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி.
– – – – –
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், இராயத்த மங்கலம் கிராமத்தில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் ரெ.இராமசாமி – ரா.பரிபூரணம் ஆகியோரின் இளைய மகன் இரா.பிரபாகரன் – பி.மஞ்சு இணையருக்கு இன்று (5.3.2024) காலை 9.46 மணிக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப்பட்டது.