சென்னை, மார்ச் 5 – பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு கணவருடன் ‘பைக் டூர்’ வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு இடத்தில் கூடாரம் அமைத்து தங்கி இருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை தாக்கி பாலியல் வன் புணர்வு செய்து அந்த பெண்ணின் கணவரையும் தாக்கியுள்ளது.
இக்கொடூரச் செயலில் ஈடு பட்டவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருவதாக காவல் துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ‘பைக் டூர்’ வந்த இணையர்களுக்கு நேர்ந்த கொடூ ரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைகுனியச் செய்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ், Ôஎக்ஸ்Õ தள _ பதி வில், 66 நாடுகளை மகிழ்ச்சியுடன் வந்த இணையர் வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட போது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?
இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.