மத போதையை விடவா?
* தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது.
– பிரதமர் மோடி
>> நாளும் நாளும் நீங்கள் படைத்துவரும் மத போதையை விடவா?
ஆர்வமுடன்….
* பி.ஜே.பி.யின் தேசிய தலைமை உத்தரவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்.
– அண்ணாமலை பேட்டி
>> நல்லது. அவர் போட்டியிடட்டும்! தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.
உயிரோடு இருந்திருந்தால்…
* ஆன்மிகத்தால் இந்தியாவுக்கு சிறப்பிடம்.
– தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து
>> காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உயிரோடு இருந்திருந்தால், இதைக் கேட்டு சிரித்து இருப்பார்.
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment