பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி கேதாரிமங்கலம் திருவேங்கடம் அவர்களின் 27 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நேற்று (3.3.2024) காலை 10 மணி அளவில் கேதாரிமங்கலத்தில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவரது நினைவிடத்தில் நாகை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது.
நிகழ்வில் திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, நாகை மாவட்ட துணைத்தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, நாகை ஒன்றிய செயலாளர் குஞ்சுபாபு, சின்னதுரை ஆகி யோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர் நிகழ்வில் இளைஞரணி தோழர் இளையராஜா திருவேங்கடம் அவர்களின் புதல் வர்கள் குணசேகரன், வீரமணி,இளங்கோவன், தி.மு.கழகத் தைச் சார்ந்த ராம்கி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதி யாக திருவேங்கடம் அவர்களின் புதல்வர் எஸ்.திருவேங்கட ரவி நன்றி கூறினார்.
பெரியார் பெருந்தொண்டர் திருவேங்கடம் 27 ஆவது நினைவு நாள்
Leave a Comment