புதுடில்லி, அக்.1 நடப்பு நிதியாண்டின் முதல் அய்ந்து மாதங்களில் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 36 சதவீதத்தை எட்டி யுள்ளது.
இது குறித்து தலைமை கணக்கு அலுவலகம் (சிஜிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவ ரங்கள் தெரிவிப்பதாவது:
ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை (செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள இடைவெளி) கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ரூ.6.42 லட்சம் கோடியாக உள்ளது.
இது, நடப்பு நிதியாண்டு முழுமைக்குமாக நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ண யிக்கப்பட்டிருந்ததில் 36 சதவீத மாகும்.
2022-_2023 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை அந்த ஆண்டு இலக் கில் 32.6 சதவீதமாக இருந்தது.
முந்தைய 2022-_2023-ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந் தாலும், நிதியாண்டின் முடிவில் அது உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருந்தது.
இந்த நிலையில், நடப்பு 2023-2024-ஆம் நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.9 சதவீதமாகக் குறைக்க ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2023-_2024-ஆம் நிதி யாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நிகர வரி வருவாய் ரூ.8.03 லட்சம் கோடியாக இருந்தது. இது, மொத்த பட்ஜெட் இலக்கில் 34.5 சதவீதம் ஆகும்.
2022-_2023-ஆம் நிதியாண் டின் இதே காலகட்டத்தில் அரசின் நிகர வரி வருவாய் அந்த நிதியாண்டின் பட்ஜெட் இலக் கில் 36.2 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் இந்த அய்ந்து மாதங்களில் ஒன்றிய அரசின் மொத்தச் செலவுகள் ரூ.16.71 லட்சம் கோடியாக உள் ளது. இது, பட்ஜெட் ஒதுக் கீட்டில் 37.1 சதவீதம் ஆகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 35.2 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதங்களில் ஒன்றிய அரசின் மொத்த செல வுகளில், ரூ.12.97 லட்சம் கோடி வருவாய் செலவினக் கணக் கிலும், ரூ.3.73 லட்சம் கோடி மூலதன செலவினக் கணக்கிலும் உள்ளன என்று அந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய அரசின் நிதிப் பற் றாக்குறை என்பது அரசுக்குத் தேவைப்படும் கடனைப் பிரதி பலிக்கிறது.