கடலூர், மார்ச் 4– கடலூர் மாவட்டத்தில் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பா திரிப்புலியூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலை யங்களில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார் பாக எழுச்சி மிக்க ரயில்மறியல் போராட்டம் 2.3.2024 அன்று நடைபெற்றது.
திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் துறைமுகம் ஜங்ஷன் – திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நிழற் குடை, குடிநீர், கழிவறை, சைக்கிள் நிறுத்தம், இரவு நேரங்களில் பேருந்து வசதி ஏற் படுத்த கோரியும், திருப்பாப் புலியூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்கு இரவு 9 மணி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மன்னார்குடி, மஹால் விரைவு வண்டி கடலூரில் நின்று செல்ல வேண்டும்.
மற்றும் சேலம்- விருதாச் சலம், விழுப்புரம்- தாம்பரம் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய வேண் டும், மயிலாடுதுறையிலிருந்து கோவை மைசூர் செல்லும் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
சென்னை – காரைக்குடி புதிய ரயிலை விரைந்து இயக்கிட வேண்டும், கடலூர்- புதுவை- சென்னை இருப்பு பாதைத்திட்டத்தை நிறை வேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் திமுக கூட்டணி கட்சியினர், குடி யிருப்போர் அமைப்பு பொது நல அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது.
பேரணியாக சென்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் திலகர், மாநில துணைத் தலைவர் சந்திர சேகரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் குளோப், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், மாநில நிர்வாகி சிறீதர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் லெனின், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் எழி லேந்தி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ரஹீம், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் எம்.மருத வாணன், செயலாளர் பி.வெங் கடேசன், பொதுநல அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, தனியார் பேருந்து சங்க தலைவர் குரு.ராமலிங்கம், மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.