சட்டத் துறைக்கு 1,362 தமிழ்க் கலைச் சொற்கள் வல்லுநர் குழு வழங்கியது

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.1- சட்டத் துறையில் பயன்படுத்துவதற்காக சட்ட வல்லுநர்கள் குழுவினர் 1,362 கலைச் சொற்களை வழங்கியுள்ள நிலையில், அந்த சொற்கள் குறு நூலாக தொகுக்கப்பட்டு பயன்பாட் டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.

சட்டத் துறையில் உள்ள அனைத்துச் சொற்களுக்குமான தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கும் வகையில் துறை சார் வல்லுநர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் அகரமுதலித் திட்ட இயக்கக அலுவலகத்தில் 29.9.2023 அன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்ட மேனாள் நீதிபதி கு. தர்மராஜ், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய மேனாள் உறுப்பினர் மு. முத்துவேல், வழக்குரைஞர்கள் இ.அங்கயற்கண்ணி, இரா. கணேசன், பா.மு. திருமலை தமிழரசன், கு. பகவத்சிங், பா. மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட துறை சார்ந்த பல வல்லுநர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்து சட்டத் துறை சார்ந்த 1,362 தமிழ்க் கலைச்சொற்களை அகரமுதலி இயக்ககத் துக்கு வழங்கினர்.

முன்னதாக, கூட்டத்துக்கு தலைமை வகித்து அகரமுதலி இயக்குநர் கோ.விசயராகவன் பேசுகையில், சட்டக் கலைச்சொற்களை உடனுக்குடன் வடிவ மைத்துப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்காடு மன்றங்கள் சார்ந்த சொற்கள் தமிழில் இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும். அதற்கு இது போன்ற சட்ட வல்லுநர்களின் துணையும் ஒத்துழைப்பும் தேவை என்றார் அவர்.

முன்னதாக, இந்த கூட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. சாந்தி, தொகுப் பாளர்கள் வே.கார்த்திக், பிரபு, பதிப்பா சிரியர் தி. பாலசுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *