திருச்சி, மார்ச் 4- திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நேற்று (3.3.2024) காலை 7.30 மணியளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை துவக்கி வைத்து சிறப்பித்தார். மருத்துவர் சீனிவாசன், பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேரா. ஏ. ஜெசிமா பேகம் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இம்முகாமில் திருச்சி சுந் தர் நகர், கலைஞர் கருணாநிதி மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதியிலுள்ள 218 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சுப்ரமணி யபுரம் அரசு ஆரம்ப சுகா தார மய்யம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட் டக் குழுவினர், பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மஞ்சுளா வாணி மற்றும் செவிலியப் பணியாளர்கள் மிகவும் சிறப்பாக செய் திருந்தனர்.
திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
Leave a Comment