ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி – பிரதிக்கட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதன் நியாயமும் இயற்கையேயாகும். ஆனால், அவ்விதப் போராட்டமானது நியாயமான முறையிலும், ஒருவரை ஒருவர் துஷ்பிரச்சாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத்தக்க விடயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும், துஷ்பிரச்சாரம் செய்வதும் ஒரு நிமிடமாவது பொறுத்துக் கொண்டிருக்க முடிந்த காரியமாகுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’