சென்னை நூலக சங்கம் – தமிழ்நாடு
நூலகர்கள் சங்கம் நடத்திய பன்னாட்டு மாநாடு
வல்லம், அக். 1- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு நாள் பன்னாட்டு மாநாட் டினை கல்வியியல் துறை அர்ஜுன் சிங் நூலகம் மற்றும் சென்னை நூலக சங்கம் மற்றும் தமிழ்நாடு நூலகர்கள் சங்கம் இணைந்து நடத்தியது.
இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக பெரி யார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் அர்ஜுன் சிங் நூலகத்தின் இயக்குநர் பேராசிரியர் நர்மதா அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரி யர் செ.வேலுசாமி வாழ்த் துரை வழங்கினார்.
இலங்கை யுவா வெலசா பல்கலைக்கழ கத்தின் நூலகர் முனைவர் பிரதீபன் மற்றும் பாரதி தாசன் பல்கலைக்கழகத் தின் பேராசிரியர் முனை வர் சீனிவாசராகவன் ஆகியோர் சி றப்புரையாற் றினார்கள்.
மேலும் சிறப்பு விருந் தினராக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் இயக்குநர் மற்றும் மாலா குழுமத் தின் தலைவர் முனைவர் நித்தியானந்தம், நந்தனம் பல்கலைக்கழகத்தின் நூலகர் முனைவர் கோதண்டராமன், பூண்டி புஷ்பம் கல்லூ ரியின் நூலகர் முனைவர் கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் பாலசுப்ரமணி, புதுச்சேரி தாகூர் அரசு மற்றும் கலை கல்லூரியின் முதல்வர் முனைவர் சசி கந்தாதாஸ் சிறப்பு விருந் தினரர்களாக வருகை புரிந்து பல கருத்துகளை மாணவர்களுக்கு பகிர்ந் தார்கள்.
மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கல்வி புல முதன்மையர் வயலட் ஜுலி, கல்வி புல ஆராய்ச்சி இயக்குநர் ஜெயசிம்மன், திபிஷிவி முதன்மையர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கு பெற்று விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் பல மாணவர் கள் தங்களுடைய கட்டு ரைகளை சிறப்பாக வழங் கினார்கள். இறுதியாக கல்வியல் துறையின் பேராசிரியர் கார்த்திக் நன்றியுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் நிகழ்வாக கல்வியல் துறையின் தலைவர் முனை வர் தமிழ்வாணன் அனை வரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவா ளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத் தின் நூலகர் முனைவர் தனவந்தன், சென்னை சிறீ கன்னிகா பரமேஸ்வரி கலை அறிவியல் கல்லூ ரியின் நூலகர் முனைவர் மாலதி, சென்னை மெட் ராஸ் மெடிக்கல் கல்லூரி யின் நூலகர் ஜனார்த் தனன்பிச்சை, கல்வியியல் துறை ஓய்வு பெற்ற பேரா சிரியர் முனைவர் மோக னசுந்தரம் அர்ஜுன் சிங் நூலகத்தின் ஆலோசகர் முனைவர் பெருமாள், திபிஷிவி முதன்மையர் முனைவர் விஜயலட்சுமி, கல்வி புல முதன்மையர் முனைவர் ஜெயசித்ரா ஆகியோர் பங்கு கொண்டு விழாவினை சிறப்பித் தனர்.
அர்ஜுன்விசிங் நூலகத்தின் நூலகர் முனைவர் ராஜு இரண்டு நாள் மாநாட்டின் அறிக் கையை சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங் களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழா வின் நிறைவாக மாணவர் களின் கலை நிகழ்ச்சிக ளுடன் அர்ஜுன்சிங் நூலகத்தின் துணை நூல கர் விவேகானந்தன் நன் றியுரை கூறி விழாவினை நிறைவு செய்தார்.