வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட விழிப்புணர்வுப் பேரணி

2 Min Read

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் பங்கேற்பு

தமிழ்நாடு

சென்னை, மார்ச். 3- வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி சென் னையில் அமைச்சர்கள் மு.பெ.சாமி நாதன், சி.வி.கணேசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் 1.3.2024 அன்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிக நிறு வனங்களில் தமிழில் பெயர்ப் பலகை மாற்றம் குறித்த விழிப் புணர்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மயிலாப்பூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், “தமிழ் மொழியை மேம் படுத்துவது மட்டுமின்றி, காப் பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். தாய் தமிழுக்காக போராடி சிறை சென் றவன் நான்.
அந்த அடிப்படையில் தமிழ் மொழியை மேம்படுத்தி அடுத்த சந்ததியினரும் அதை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் ஒத் துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசும் போது, “தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பெயர்ப் பலகைகள் எல்லாம் ஹிந்தியில்தான் இருக் கும்.
அங்கு ஆங்கிலம் கிடையாது.ஆனால், தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் ஆங்கிலத்துக்கு முக் கியத்துவம் தருகின்றன. இந்த நிலை மாறவேண்டும். தமிழ் மொழி தான் நம் அடையாளம்” என்றார்.
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும் போது, “வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது தொடர் பாக மே 5ஆ-ம் தேதி நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் 10 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
நாள்தோறும் 60 தராசுகளுக்கு மட்டுமே அரசு முத்திரையிடப் பட்டு வந்தது. எங்கள் கோரிக் கையை ஏற்று, இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதை வரவேற் கிறோம்” என்றும் தெரிவித்தார்.
தமிழில் பெயர்ப் பலகை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேர ணியை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, ஒரு பல்பொருள் விற்பனை கடையில் தமிழில் பெயர்ப் பலகை மாற்றம் செய்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசு ரத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர்
ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *