இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (3.3.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73 உட்பட்ட திருவேங்கடம் சாலை, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந் நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.