கேப் கேனாவெரல், மார்ச் 2 அமெரிக்காவில் இன்ட்யுடிவ் மெஷின்ஸ் என்ற நிறுவனம் ஒடிசியஸ் என்ற தனியார் விண் கலத்தை கடந்த 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பியது. இது நிலவின் தென்துருவத் தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. எனினும் இது தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் சாய் வாக தரையிறங்கியதாக வும் லேண்டரின் கால்கள் உடைந்ததாகவும் கூறப்பட் டது. எதிர்பார்த்ததைவிட வும் ஒடிசியஸின் சூரிய சக்தி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை நீண்ட நாட்கள் நீடித்தது. இதனை தொடர்ந்து நேற்று செயல் பாட்டை நிறுத்தி யது.