சென்னை,மார்ச்.1- திமுக தலை வரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71ஆவது பிறந்த நாளில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். சமக ஊடகங்களில் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சித் தலைவராக தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இந்தியா கூட்டணியை வழி நடத்துகிறார். இந்தியா முழுவதுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகாரின் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி, உ.பி. மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப்பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் பலரும் உற்சாகத் துடன் தங்களின் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வைப் பகிர்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.