சேலம் பழனி புள்ளையண்ணன் – ரத்தினம் தாலி மறுப்பு – இணையேற்பு விழா 2.3.1975 அன்று சேலம் கருப்பூரில் நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பய்யா தலைமையில், நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். தமது 49ஆம் ஆண்டு மண நாள் (2.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு கழகக் காப்பாளர் பழனிபுள்ளையண்ணன் – ரத்தினம் இணையர் ஒரு மூட்டை வெல்லம், நன்கொடை ரூ.5,000 வழங்கினர். வாழ்த்துகள்! நன்றி!