தூத்துக்குடியில் இயங்கி வந்த – சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைத்து, தூத்துக்குடி சுற்றுவட்டாரங்களையே பாழ்படுத்தக் காரணமான ஸ்டெர்லைட் தொழிற்சாலை மக்களின் பலத்த எதிர்ப்புக் காரணமாக கொள்கை முடிவெடுத்து மாநில அரசு மூடியதை எதிர்த்து, அதைத் திறக்க அம்முதலாளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பினை, தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து வரவேற்கின்றனர்!
சிறப்பாக வாதாடிய தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்!
இந்த நல்ல தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்!!
மக்களைக் காப்பாற்றும் அரிய தீர்ப்பு ஆகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1-3-2024