சாகித்திய அகாதெமி விருது பெற்ற பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா 28.9. 2023ஆம் நாள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னைக் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கவிஞரின் 83 நூல்கள் கொண்ட பெருந்தொகுப்பு “எரிதழலும் இளங்காற்றும்” என்னும் 1730 பக்கங்கள் கொண்ட ஒரே நூலாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர் ய.மணிகண்டன், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கவிஞரின் துணைவியார் சாந்தகுமாரி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், நீதியரசர் ச. ஜெகதீசன், ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ், அமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, புதுவை அமிர்த கணேசன், கவிஞர் கவிமுகில் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.