சென்னை,பிப்.29 இலங்கை கடற் படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக் கப்படுவது, கைது செய்யப் படுவதை தடுக்க ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று (28.2.2024) கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய தாவது: பாஜக சார்பில் 2013-ஆம் ஆண்டு நடந்த கடல் தாமரை மாநாட்டில் பங்கேற்ற சுஷ்மாஸ் வராஜ், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைப்போம். மீனவர்கள் பாது காப்புக்காக கடற் படையை எல்லை யில் நிறுத்துவோம். படகுகள் பறி முதல் செய்யப்படாது. மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்போம்’’ என்றார்.
அப்படி கூறித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான மீன வர்கள் கொல்லப்பட்டனர். ஏராள மான படகுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற் றுவதிலும், மீனவர்களை நசுக்குவ திலும் முதன்மையாக பாஜக உள்ளது. மக்கள் விரோத பாஜக ஆட்சியை தூக்கி எறியும் 2-வது சுதந்திர போராட் டத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் இறங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் மாநில தலைவர் கே.வீ .தங்கபாலு, அசன் மவு லானா எம் எல்ஏ, துணை தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.