கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.10.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* செயல்படாத மோடி அரசை வீழ்த்துங்கள்,
ப.சிதம்பரம் வேண்டுகோள்.
* நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* இந்தியா கூட்டணி மலை போல் வலுவாக உள்ளது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அறிவிப்பு.
தி டெலிகிராப்:
* பிரதமர் நரேந்திர மோடியின் ஹிந்து தேசியவாதம் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே பதற்றத்தைத் தூண்டுகிறது. பிரதமரின் ஹிந்துவுக்கே முதலிடம் என்ற கொள்கைகள் மற்றும் சகிப்புத்தன்மை இழப்பு உலகெங் கிலும் உள்ள இந்திய சமூகங்களுக்குள் பரவி, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் பல்வேறு ஜாதிகளி டையே வரலாற்றுப் பிளவுகளை தீவிரப்படுத்தியுள்ளது என்கிறார் கட்டுரையாளர் நோரிமிட்சு ஒனிசி.
– குடந்தை கருணா