தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கல்
ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்சம் நிதி.
வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை- அரசுத்தேர்வு முகமையால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழிப் பாடத் தாள் தகுதித் தேர்வு கட்டாயம்.
பண்டைய தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 2022ஆம் ஆண்டில் கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக் கோட்டை, துலுக்கர்பட்டி பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வு (அறிவிப்பு: 20.1.2022, தொடக்கம் 11.2.2022)
அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு. (6.9.2021)
அரசு- நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்.
தமிழ்நாட்டில் வேளாண்மைக் கெனத் தனி நிதிநிலை அறிக்கை.
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையான 69 சதவிகிதத்தைப் பின்பற்றிட ஆணை!
சென்னை அண்ணாசாலை அரசினர் தோட்டம் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் கலைஞருக்குச் சிலை.
அயோத்திதாச பண்டிதருக்கு 175ஆம் ஆண்டின் நினைவாக காந்தி மண்டப வளாகத்தில் சிலை.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்குச் சிலை.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியனுக்குச் சிலை.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக நடப்புக் கல்வி ஆண்டு முதல் (2022) வழங்க ஒன்றிய அரசு முடிவு.
கிராமப்புற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சமாக உயர்த்தி 16.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தந்தை பெரியார் விருதுத் தொகை ஒரு சவரன் தங்கப் பதக்கத்துடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்கள் உள்ளிட்ட 208 பேருக்கு பணி நியமனம்.(14.8.2021).
ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்குப் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயர் சூட்டப்பட்டது. 19.12.2021
கோவிட்-19 பெருந்தொற்றால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய ‘இல்லம் தேடிக் கல்வி’ சிறப்புத் திட்டம். (தொடக்கம் 27.10.2021)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களது முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் மாநில அளவிலான ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கம் (அறிவிப்பு: 8.9.21)
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஏனைய நலவாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாய் உயர்வு.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்.
திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவுடன் புனரமைப்பு!
புதுப்பொலிவுடன் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் (24.6.2021). விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் புதிய சமத்துவபுரம் (5.4.2022).
7.5 சதவிகித சிறப்பு உள்ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும் (அறிவிப்பு : 20.9.2021).
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல் (அறிவிப்பு 17.12.2021 ).
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைப்பு.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் ‘சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் (அறிவிப்பு 13.4.2022)
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் (அறிவிப்பு 26.4.2022)
அன்னைத் தமிழில் அர்ச்சனை (பாடல் வெளியீடு: 12.8.2021)
அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாகத் தமிழில் வெளியிடுவதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ.41,55, 590 நிதி ஒதுக்கீடு.
பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக வெளியிட ரூ.5 கோடி நிதி.
சங்க இலக்கிய நூல்களைச் சந்தி பிரித்து உரையுடன் தொகுப்பு நூலாகவும் மற்றும் திராவிடக் களஞ்சியம் எனும் தொகுப்பு நூலை உருவாக்கி அச்சிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் ‘தமிழ்க்கவிஞர் நாள்’ அரசு அறிவிப்பு.
கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை.
31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 15,75,000 மாணவர்கள் பயன்படும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக மாதம் 1000 ரூபாய் அளிக்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம்.
காலம் காலமாகச் சமூகத்திற்காக உழைத்து வரும் குடும்பத் தலைவிகளின் தன்னலமற்ற உழைப்பிற்கு மரியாதை செய்யும் வகையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்‘ எனும் பெயரில் மாதம் 1000 ரூபாய்!