“தளபதி ஸ்டாலின் எத்தகையவர்?’ – ஆசிரியர் கி.வீரமணி

viduthalai
1 Min Read

“தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர். விதையாகி முளைத்து பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி பழுத்து இருப்பவர். பணிதான் தனக்கு முக்கியமே தவிர, பதவியல்ல என்றே கருதி உழைத்து, திராவிடர் இயக்கத்தை இன எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தலைவருக்குத் தோள் கொடுத்து கடமையாற்றும் ஒரு கட்டுப்பாடு மிளிரும் சிப்பாய்!
தன்னை தளபதி என்றுகூட அழைத்துக்கொள்ள விரும்பாத அடக்கத்தின் உருவம்.
பேராசிரியர் பதித்த முத்திரை என்ன சாதாரணமா?

அதனால்தான் அவரை வெறுப்பவர் எவருமில்லை; எதிர்க்கட்சியினர் உள்பட!
அவருடைய கண்ணியமிக்க அணுகுமுறைகள் அவரது தி.மு.கழகத்தைப் பாசறையாக்கும் கண் துஞ்சாப் பணி அவரை தலை வரால் அடையாளம் காணச் செய்துள்ளது!
இளைஞர் அணிப் பொறுப்பில் இருந்தார். அவரும் ’60 வயதை அடையும் இளைஞர்’ இன்று என்பதையும் மறந்துவிட முடியாது. அவரின் முதிர்வுக்கும் அதுவும் ஓர் அடித்தளம்!
“எல்லோர் எதிர்ப்பார்ப்பையும் விஞ்சி செயலாற்றி நிரூபிப்பார் – என்பதில் அய்யமில்லை”

– தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையிலிருந்து… (‘விடுதலை8 – 9.1.2013)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *