சமூகநீதியை உறுதிபட நிலைநாட்ட இன்றும் நமக்குத் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.
தந்தை பெரியார் ஒரு நாத்திகர்தான். கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, அவர் சமூக விடுதலைக்கான ஒரு போராளி! ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கானப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.
பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்தவர்.
சுயமரியாதை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூறி, மனித உரிமைகளை முழுமையாக நிலைநாட்டியவர். பகுத்தறிவு வழியில் மானுட விடுதலையை முன்னெடுத்தவர்.
– மு.க.ஸ்டாலின்