முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தைக் கேலி செய்தும் ‘ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என்றும் திமிரோடு செய்தி வெளியிட்ட ‘தினமலர்’ பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு.
M.K.Stalin @mkstalin
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே ஸநாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!