2-03-2024 சனி காலை 10 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக தொழில்நுட்ப குழு மாநில கலந்துரையாடல்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; மொத்த இந்தியாவிற்கே முக்கியமானது ஆகும்.
இது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிற தேர்தல் அல்ல! மாறாக இந்திய மக்களின் வாழ்வா? சாவா? போராட்டம்!
இந்நிலையில் இந்திய மக்கள் அனைவருக்குமே நல்ல தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டிற்கு உள்ளது!
அதிலும் பெரியார் தொண்டர்களாம் நமக்கு கருத்தியல் ரீதியாகச் சற்று அதிகமாகவே உள்ளது!
இதனையொட்டியே அவசர சந்திப்பாகவும், அதிமுக்கிய நிகழ்வாகவும், தகவல் தொழில் நுட்பக் குழுவின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தை தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்!
தேர்தல் முடியும் வரை நமக்குத் தேர்தல் பணிகள் தான்! பிற பணிகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்கள்!
எனவே நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மிக முக்கியமான ஆலோசனைகளும், புதிய உத்திகள் பலவற்றையும் பேச இருக்கிறோம்!
எனவே, தாங்கள் மட்டுமின்றி, மாவட்டத்தில் இருந்து ஏராளமான தோழர்களை அழைத்து வரவும்!
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்; பாஜகவை ஒழித்தால் தான் இந்தியாவை மீட்டெடுக்க முடியும்!
மதிப்பிற்குரிய தோழர்களே திரண்டு வாருங்கள்! இந்தியாவை மீட்டெடுக்க தமிழர் தலைவர் அழைக்கிறார், மகிழ்ச்சியோடு புறப்படுங்கள்!
வயது தடை இல்லை அனைவரும் பங்கேற்கலாம் வாருங்கள் தோழர்களே!
– திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு